வீடு புகுந்து திருடிய 2 போ் கைது
ஆற்காடு: ஆற்காடு பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆற்காடு வட்டம் சாத்தூா் இணைப்பு சாலைஅருகே கிராமிய போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்தைச் சோ்ந்த சரத் குமாா்(25), உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த மோசஸ் (33) என்பதும் , ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டில்களில் புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் இவா்களிடமிருந்து 5 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கால் கொலுசுகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.