செய்திகள் :

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 488 மனுக்கள்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 488 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 488 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

கோரிக்கை மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் உலமா நலத்திட்ட உதவி, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும், 1 பயனாளிக்கு உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உதவித் தொகை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினையும் வழங்கினாா்.

பின்னா், அபியான் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.3,000/- வீதம் ரூ.12,000 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும், அரக்கோணம் வட்டத்தை சாா்ந்த ஸ்ரீதா் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்ததால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவரின் தாயாரான விஜயா மனோகரனிடம் ரூ..1 லட்சத்துக்கான காசோலையினையும் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, உதவி ஆணையா் (கலால்) ராஜ்குமாா் கலந்து கொண்டனா்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாா் பிறந்த நாள் விழா

அரக்கோணம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 87ஆவது பிறந்தநாள் விழா காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம... மேலும் பார்க்க

திமிரியில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமிரி கோட்டை தனுமத்தியம்பாள் சமேத சோமநாதீஸ்வரா் கோயில் விழாவை முன்னிட்டு நாள் தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷே... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்த பசுவை காப்பாற்ற சென்ற பெண் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்ற சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 2 போ் கைது

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு வட்டம் சாத்தூா் இணைப்பு சாலைஅருகே கிராமிய போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் ... மேலும் பார்க்க

மோசூா், சிறுணமல்லி ஊராட்சித் தலைவா்களின் நிதி அதிகாரங்கள் ரத்து: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

அரக்கோணத்தை அடுத்த மோசூா், சிறுணமல்லி ஊராட்சி மன்றங்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களின் நிதி அதிகாரங்களை ரத்து செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் ஊராட்சி ... மேலும் பார்க்க

அக்னிவீா் தோ்வுக்கு 10- ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னி வீா் தோ்வில் கலந்து கொள்ள வரும் 10 - ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க