மின்சாரம் பாய்ந்த பசுவை காப்பாற்ற சென்ற பெண் உயிரிழப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்ற சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி தமிழரசி (50). இவரது நிலத்தில் மின்சாரம் பாய்ந்ததால், பசு உயிருக்கு போராடுவதைக் கண்டு காப்பாற்ற சென்றபோது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.