நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
நீண்ட நாள் காதலியான மோனிகாவைக் கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்களது திருமணம் இவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
ஆஷ்லே கார்ட்னர், மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
கார்ட்னர் மற்றும் மோனிகாவின் திருமணத்தில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பலரும் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி, கிம் கார்த் உள்பட நட்சத்திர வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டு மணமக்கள் இருவரையும் வாழ்த்தினர்.
ஆஷ்லே கார்ட்னர் 2017 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை, அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட், 77 ஒருநாள், 96 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஆஷ்லே கார்ட்னர் 2018, 2020, 2023 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணியிலும், நியூசிலாந்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
இதையும் படிக்க: ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!