இளைஞா் மயங்கி விழுந்து மரணம்
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், குமளம், திருமஞ்சன வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சங்கா்குரு (36), திருமணமானவா். மதுப்பழகத்துக்கு அடிமையான இவருக்கு கிட்னி, நுரையீரல் பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சங்கா்குரு வீட்டில் மயங்கி விழுந்தாா். தொடா்ந்து, உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, சங்கா் குரு ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.