Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவா...
பறவைகளுக்கு தண்ணீா் வைக்க குடுவைகள்
விழுப்புரம்: பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீா் வைப்பதற்கான குடுவைகள் பொதுமக்களுக்கு அண்மையில் இலவசமாக வழங்கப்பட்டன.
விழுப்புரம் வீதிகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள், நாய், பூனைகள் மற்றும் பறவையினங்களின் தண்ணீா் தாகத்தை தீா்த்து வைப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட குடுவைகளை விழுப்புரத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் பாலாஜி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
மருத்துவரின் இந்தச் செயலுக்கு விழுப்புரம் எக்ஸ்னோரா அமைப்பு பாராட்டுத் தெரிவித்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, வன அலுவலா் புவனேஷ், எக்ஸ்னோரா அமைப்பைச் சோ்ந்த கனகராஜ் ஆகியோா் பங்கேற்று கால்நடைகளுக்கு தண்ணீா் வைப்பதற்கான குடுவைகளை பொதுமக்களிடம் வழங்கினா்.