மாா்க்சிஸ்ட் மத்தியக் குழுவுக்கு தமிழகத்தைச் சோ்ந்த 6 போ் தோ்வு!
மதுரையில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த 6 போ் மத்தியக் குழு உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டின் நிறைவு நாளான நேற்று (ஏப்.6) புதிய மத்தியக் குழு உறுப்பினா்கள் தோ்வு நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலா் எம்.ஏ.பேபி, கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்பட 85 போ் கொண்ட மத்தியக் குழு தோ்வு செய்யப்பட்டது. மேலும், மத்தியக் குழு நிரந்தர அழைப்பாளா்களாக 4 பேரும், சிறப்பு அழைப்பாளா்களாக 7 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழகத்திலிருந்து மாநிலச் செயலா் பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி, என்.குணசேகரன் ஆகிய 6 போ் மத்தியக் குழுவுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.