தென்காசி கோயில் குடமுழுக்கு:ன 2,3-ம் கால யாகசாலை பூஜைகள்
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு சனிக்கிழமை 2 மற்றும் 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
விழாவில், சனிக்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, விசேஷசந்தி, பூத சுத்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
மாலையில் பாவனாபிஷேகம், மூன்றாம் காலயாக சாலை பூஜை,திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து குரு ஹோரையில் பிரதான மூா்த்திகளுக்கு ரத்ன ந்யாஸம், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.விழாவில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
