Modi TN Visit: `ராமேஸ்வரம், மதுரை' - பிரதமர் மோடியின் தமிழக விசிட்டும், தகிக்கும் அரசியல் களமும்
டெல்லிக்கு அ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான பரபரப்பு, ‘மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில்’ பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க கூட்டணி போர்க்கொடி... எனத் தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றத்தின் சலசலப்பு. இந்தச் சூழலில், நாளை (ஏப்ரல் 6) தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி.

ராமேஸ்வரத்தில், பிரதமர் பேசுவதற்கு பிரமாண்ட விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவிருக்கிறார். இதுதவிர ராமேஸ்வரத்தில் செவ்வாய் ஹோரை சமயத்தில் பூஜைகளைச் செய்யவிருக்கிறார். அரசியல் சந்திப்புகள், வழிபாடு என ராமேஸ்வரம் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மதுரைக்கும் செல்லவிருக்கிறார். அரசியல் வி.ஐ.பி-க்கள் பலரும் பிரதமர் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, "நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ…
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
இப்படியான பல அரசியல் வி.ஐ.பி-க்கள் சந்திப்பு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் சர்ச்சைகள், கூட்டணி விவகாரங்கள், வருத்தங்களைக் கொட்டித்தீர்க்க காத்திருக்கும் அரசியல் புள்ளிகள் என நாளை அரசியல் வெடிகள் ஒவ்வொன்றாக வெடிக்கத் தயாராக இருக்கின்றன. அது பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கும், யூகங்களுக்கும் அடித்தளமிட்டு தகிக்கும் தமிழக அரசியலில் எண்ணெய்யை ஊற்றவிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
