பேரிடர் நிவாரண நிதி! தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி ஒதுக்கீடு
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைத்து அரசு அதிரடி உத்தரவு
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரில் அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைக்க நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து நகராஞ்சி வட்டத்தில் சிலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் பாபு. பெரம்பலூர் நகராட்சியில் கணக்கராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மேலாளராகவும், பொறுப்பு ஆணையாளராகவும் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் பணியிலிருந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்கள் வாங்கிக் குவித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து புகார் கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பாபு, வருமானத்துக்கு மீறிய சொத்துக்கள் சேர்த்ததற்கான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் உடனடியாக எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பாபு, அரசு அனுமதியற்ற கணக்கில் வராத சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
தற்போது பெரம்பலூர் நகராட்சியில் கணக்கராகப் பணியாற்றி வரும் பாபு, வருகிற மார்ச் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.
இந்தநிலையில் பாபு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பினர்.
இந்த பரிந்துரையின் பின்னணியில், பாபுவின் பணி ஓய்வை நிறுத்தி வைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வேலை பார்த்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து வாங்கியதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் பாபுவிற்குப் பணி ஓய்வு நன்னடத்தை சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் விரைவில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பாபுவின் சொத்துக்களை மறு அளவீடு மற்றும் மதிப்பாய்வு செய்ய வருவார்கள்" என்று நகராட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb