ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
CSK vs DC: "நான் குணமாகிட்டேன்..." - கேப்டன் ருத்துராஜ் கொடுத்த ட்விஸ்ட்; கான்வே ரிட்டர்ன்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜூக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டனாவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ருத்துராஜ் குணமடைந்ததால் அவரே கேப்டனாக வந்தார். அக்சர்தான் டாஸை வென்றார். சென்னை அணி சேஸிங் செய்கிறது.

டாஸில் ருத்துராஜ் பேசியவை, "நாங்களும் முதலில் பேட் செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தோம். பிட்ச் வறண்ட நிலையில் காணப்படுகிறது. வெயிலும் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.
டி20 இல் உங்களுக்கு எப்போதுமே மொமன்டம் கிடைக்க வேண்டும். ட்ரெஸ்ஸிங் ரூமில் பாசிட்டிவ்வாகத்தான் உரையாடல்களை வைத்துக் கொள்கிறோம்.
பீல்டிங்கில் நாங்கள் இன்னும் நிறையவே முன்னேற வேண்டும். என்னுடைய முழங்கை குணமாகிவிட்டது. ஆடுவதற்கு ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.
ஓவர்டனுக்குப் பதில் கான்வேயையும் ராகுல் திரிபாதிக்குப் பதில் முகேஷ் சௌத்ரியும் அணிக்குள் வருகிறார்கள்" என்றார்.

தோனி மீண்டும் கேப்டனாக போகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ருத்துராஜ் ட்விஸ்ட் கொடுத்துவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs