பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி
சாலையை சீரமைக்கக் கோரிக்கை
போடியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், போடி போஜன் பூங்கா பகுதியில் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் போஜன் பூங்கா முதல் வடக்கு ராஜ வீதி வரை குறுகிய சாலையாக உள்ளது.
இந்த நிலையில், போஜன் பூங்கா அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனா். எனவே, இந்தப் பள்ளத்தை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.