அங்கன்வாடி காலிப் பணியிடம்: ஏப்.23-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையம், குறு அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியுள்ள பெண்கள் வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 156 அங்கன்வாடி பணியாளா்கள், ஒரு குறு அங்கன்வாடி பணியாளா், 29 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கு பிளஸ் 2-விலும், உதவியாளா் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பிலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்தவராகவும், கிராம ஊராட்சி எல்லை அருகேயுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சோ்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.ண்ஸ்ரீக்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களை இணைத்து வருகிற 23-ஆம் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலங்களில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.