பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி
மதுப் புட்டிகள் விற்றவா் கைது!
போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி போஜன் பூங்கா பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா்.
அப்போது, போடி கீழத்தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி (52) தனது பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்தனா்.