Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
அமெரிக்காவைப் போல இந்தியாவும் வரி விதிக்க வேண்டும்: அகிலேஷ்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவும் தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க பிற நாடுகள் மீது அத்தகைய வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா உள்பட 25 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அதிபா் டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்கு முன் மேற்கொண்டாா்.
அமெரிக்க பொருள்கள் மீது 52 சதவீத வரி விதிக்கும் இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான இலங்கை மீது 44 சதவீதமும் சீனா மீது 34 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லக்ளெவில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மற்ற நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பை மேற்கொண்டுள்ளாா். இந்தியாவும் தனது சந்தை மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க சீனா உள்ளிட்ட பிற நாடுகள் மீது அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதார நிலைமை மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொருளாதாரம் குறித்து அரசுத் தரப்பில் பொய்யான விவரங்கள் வெளியிடப்படுகின்றன’ என்றாா் அவா்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா குறித்த கேள்விக்கு, ‘பாஜக நில அபகரிப்பு கட்சியாகும். கோரக்பூா், அயோத்தி உள்ளிட்ட இடங்களில் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனா். இந்த மசோதா பாஜகவின் வீழ்ச்சியை உறுதி செய்யும்’ என்றாா்.