செய்திகள் :

சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப். 2 முதல் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான எம். ஏ. பேபி, 1987 முதல் 1991 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 32 வயதிலேயே எம்.பி. ஆனவர் என்பதால் மிக இளம் வயதிலேயே மாநிலங்களவை உறுப்பினரானவர்களில் ஒருவர் என அறியப்படுகிறார்.

2006 - 2011 வரை கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக பணியாற்றினார். தற்போது, கொல்லம் மாவட்டத்திலுள்ள குந்த்ரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் மறைவுக்குப் பிறகு சிபிஎம் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிற கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலத்தில் பழுது!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை ரூ... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: முதல்வர் தாமி!

மத்திய அரசின் கொள்கைகள் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். டேராடூனில் இன்று மத்திய... மேலும் பார்க்க

கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு பதில்

புது தில்லி: கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் பார்க்க

இதற்காக சிறைக்குச் செல்லவும் தயார்: மம்தா பானர்ஜி பேச்சு!

வேலையிழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 25,000 ஆசிரியர்​களை நிய... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு: மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகள் குற... மேலும் பார்க்க

வெப்ப அலை: திறந்தவெளி தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள்!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்பம், அதீத மாசு காரணமாக அங்குள்ள மக்கள் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார தினம் இன்று கடைப்பிடிக்கும் அதேவேளையில், தலைநகரில்... மேலும் பார்க்க