MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வனத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர் சிறுத்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் வீடியோ வைரலானது.
மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவால், ஓட்டுநருக்குப் பிரச்னை வந்துள்ளது. அவர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் வைரலாக பரவிய அந்த வீடியோவில், சிறுத்தை குடும்பம் ஒன்று மரத்துக்கு அடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அப்போது ஒரு கிராமவாசி கேனில் தண்ணீருடன் ஆர்வமாகச் சிறுத்தைக் கூட்டத்தை அணுகுகிறார்.
அவர்தான் வனத்துறையின் ஒப்பந்த ஓட்டுநர் சத்யநாராயண் குர்ஜார் எனப் பின்னாளில் தெரிய வந்தது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் குனோ சரணாலயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் சிறுத்தைகளுக்குச் சில அடி தூரத்திலிருந்து குர்ஜார் தட்டில் தண்ணீர் ஊற்றுகிறார். கேமரவாவுக்கு பின்னிருந்தவர்கள் அவரைத் திரும்பி வருமாறு அழைக்கின்றனர். குர்ஜார் நகர்ந்ததும் சிறுத்தைகள் தட்டிலிருந்த தண்ணீரைப் பருகுகின்றன.
Offering water or milk to #cheetahs by villagers is not a good sign for #wildlife conservation. This may lead to dangerous consequences. As usual, the forest is undisturbed.@CMMadhyaPradesh@ntca_india@PMOIndia@KunoNationalPrk@Collectorsheop1pic.twitter.com/3iIIYbd8Kn
— ajay dubey (@Ajaydubey9) April 5, 2025
குனோ சரணாலயத்துக்கு அருகாமையில் உள்ள கிராமத்தில் ஜ்வாலா என்ற சிறுத்தையும் அதன் 4 குட்டிகளும் நுழைந்த போது, கிராமவாசிகள் அவற்றைக் கல்லால் அடித்துத் துரத்திய சில நாட்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
பலரும் இந்த வீடியோ மிகவும் உன்னதமானதாகக் கருதினர். உயிர்களுடன் இணைந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டான சைகையாகப் பார்த்தனர்.
ஆனால், வனத்துறையினர் இவற்றை வேறு விதமாகப் பார்த்திருக்கின்றனர். வீடியோ வைரலான சில நாட்களிலேயே குர்ஜார் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக என்.டி.டி.வி தளம் கூறுகிறது. அவருடன் இருந்த வனத்துறை காவலரையும் இடைநீக்கம் செய்துள்ளனர்.
சிறுத்தைகள் மனிதர்கள் அருகில் இருக்கப் பழக்கப்பட்டுவிட்டால் எளிதாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தைகளைச் சக உயிர்களாக எண்ணி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லதாகப்பட்டாலும், அவை மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs