அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
`பாவம், கொல்லாதீங்க..' - பாதயாத்திரையில் 250 கோழிகளை மீட்ட ஆனந்த் அம்பானி! என்ன செய்தார் தெரியுமா?
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தற்போது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு 140 கி.மீ நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள ஆனந்த் அம்பானி, ஏற்கனவே 70 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ளார். அவர் இரவில் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறார்.

அவ்வாறு அவர் இரவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்தது. இதனால் ஆனந்த் அம்பானியுடன் வந்தவர்கள் கோழி இருந்த வேனுக்கு வழிவிட்டனர். வேனில் கோழி இருப்பதை பார்த்த ஆனந்த் அம்பானி அந்த வேனை நிறுத்தினார்.
அக்கோழிகளை காப்பாற்ற முடிவு செய்த ஆனந்த் அம்பானி, கோழிகள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்று கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார். மேலும் வேனில் இருக்கும் கோழிகளின் மொத்த விலை என்ன? என்று கேட்டார்.
அவர்கள் சொன்ன விலையை விட கூடுதலாக ஒரு மடங்கு விலை கொடுத்து, அனைத்து கோழிகளையும் அவரே வாங்கிக்கொண்டார். அக்கோழிகளை அவர் புதிதாக உருவாக்கி இருக்கும் விலங்குகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.

வேனில் இருந்த ஒரு கோழியை வாங்கிப்பார்த்தார். அவர் கோழியை கையில் பிடித்த படி இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது. வாங்கப்பட்ட கோழிகள் ஜாம்நகர் வந்தாரா முகாமில் பராமரிக்கப்படும் என்று ஆனந்த் அம்பானி தெரிவித்தார்.
ஆனந்த் அம்பானி தினமும் இரவில் 10 முதல் 12 கிலோமீட்டர் தூரம் நடக்கிறார். செல்லும் வழியில் இருக்கும் கோயில்களில் அவர் வழிபாடு நடத்துகிறார். அவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுத்து இருப்பதால் பாதுகாப்பு படையினரும் ஆனந்த் அம்பானியுடன் யாத்திரை செல்கின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
