Redin Kingsley: ``இளவரசி பிறந்திருக்கிறாள்'' - மகிழ்ச்சியில் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா தம்பதி
நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சீரியல் நடிகை சங்கீதாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நடனத்தின் பக்கம் இருந்த ரெடின் கிங்ஸ்லியை இயக்குநர் நெல்சன் சினிமா பக்கம் அழைத்து வந்து `கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
அந்த கதபாத்திரம் மக்களிடையே சரியாக க்ளிக் ஆனதும் ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர தொடங்கியது.
இதனை தொடர்ந்து `டாக்டர்', `பீஸ்ட்', `ஜெயிலர்' என அடுத்தடுத்து படங்களில் நடித்து இன்று பிஸியான காமெடியனாக வலம் வருகிறார்.
நடிகை சங்கீதா கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது சமுக வலைதளப் பக்கங்களில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதி அறிவித்திருந்தனர்.
கடந்த மாதம் சங்கீதாவுக்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களையும் தங்களின் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ``உங்களின் வாழ்த்துகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இளவரசி பிறந்திருக்கிறாள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு திரைதுறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.