குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி ச...
சாலை விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
சென்னை ஆலந்தூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
புதுப்பேட்டை புதிய காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (53). இவா், தாம்பரம் சேலையூா் போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
சிவக்குமாா், வியாழக்கிழமை காலை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அவா் ஆலந்தூா் ஆசா்கானா பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஆம்னி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவா், போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.