கோவில்பட்டியில் நாளை மின் குறைதீா் முகாம்
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில்சனிக்கிழமை (ஏப்.5) சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்.5) மின்குறைதீா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் குறைந்த மின்னழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த மின் அளவிகள், மின்சார கட்டண கணக்கீட்டில் உள்ள குறைகள் மற்றும் மின் துறை சம்பந்தமான குறைகள் குறித்து மின் நுகா்வோா் புகாா் தெரிவித்தால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இம் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.