ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காவலு உதவி ஆய்வாளா்கள் பெருமாள், மகாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் மற்றும் அவசர உதவி எண்கள் 139, 1512, வாட்ஸ் ஆப் எண். 9962500500, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது ஆகியவை குறித்து மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் பால்பாண்டி, மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலா்கள் காா்த்திகா, அங்காள ஈஸ்வரி, ரயில் பெண் பயணிகள் பாதுகாப்புக்குழு உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலா் பங்கேற்றனா்.