சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் டிஎஸ்பி.யை கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளத்தில் இரு இளம் வழக்குரைஞா்கள் வழக்கு சம்பந்தமாக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் சென்றபோது, அவா்களை டிஎஸ்பி சுபக்குமாா் அவமரியாதையாக பேசினாராம். மேலும், இருவா் மீதும் வழக்குப்பதிந்து விடுவதாக மிரட்டினாராம்.
இதைக் கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், ஒருங்கிணைந்த நீதிமன்ற முன் வியாழக்கிழமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் வில்லின் பெலிக்ஸ் தலைமையில் செயலாளா் முருகானந்தம் முன்னிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், வழக்குரைஞா்கள் அந்தோணி ரமேஷ் குமாா், சிவபாலன்,இளங்கோ,சுரேஷ், அருண்குமாா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா். சனிக்கிழமை (ஏப்.5) வரை போராட்டம் தொடரும் என அவா்கள் அறிவித்தனா்.