13,000 ரன்கள் விளாசிய ஒரே இந்தியர்.! டி20-ல் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
Trump Tariffs: 10 விநாடியில் ரூ.20 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச்சந்தை - சரிவு ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார்.
உலக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருக்கிறார்.
இந்த வரி போக அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய 10% அடிப்படை வரியும் கூடுதலாக உண்டு.

இதனால் அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதோடு அமெரிக்கா முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் ஆசிய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டுள்ளது. அது இந்திய பங்குச்சந்தையையும் விட்டு வைக்கவில்லை.
இன்று காலையில் பங்குச்சந்தை திறந்தபோது பி.எஸ்.சி எனப்படும் மும்பை பங்குச்சந்தை 4 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதே போன்று தேசிய பங்குச்சந்தையான என்.எஸ்.சி. ஒரே நேரத்தில் 1000 புள்ளிகள் சரிந்தது.
பங்குச்சந்தை திறந்த 10 விநாடியில் இந்திய முதலீட்டாளர்கள் 20 லட்சம் கோடியை இழந்தனர். சிமென்ஸ் நிறுவன பங்கு 50 சதவீதம் வரை சரிந்து அதிர்ச்சி கொடுத்து. காலை 10 மணிக்கு முதல் 30 இடங்களில் இருக்கும் கம்பெனிகளின் பங்குகள் 2700 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
தேசிய பங்குச்சந்தை 22000 புள்ளிகளாக இருந்தது. படிப்படியாக சற்று உயர்ந்து பிற்பகல் 12 மணிக்கு பி.எஸ்.சி.3000 புள்ளிகள் சரிந்து தொடர்து முதலீட்டாளர்களை ஏழையாக்கிக்கொண்டிருக்கிறது.

மும்பை பங்குச்சந்தை 72157 புள்ளிகளாக வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை மட்டுமல்லாது இந்திய ரூபாய் மதிப்பும் இன்று சரிவை சந்தித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சத்தில் இந்திய பங்குச்சந்தையில் உள்ள பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். எனவே இந்திய உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்க பொருளாதார சீர்திருத்தம் அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீனா, ஜப்பான், தைவான், ஹாங்காங் பங்குச்சந்தையிலும் கடுமையான வீழ்ச்சியை பார்க்க முடிந்தது. இந்திய பங்குச்சந்தை கடந்த 10 மாதத்தில் இப்போதுதான் முதல் முறையாக இந்த அளவுக்கு சரிவைச் சந்தித்து இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
