இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 5 மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுவதால் வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது 36 மணி நேரத்திற்கு முன்னதாகவே உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக ஏப். 8 முதல் ஏப். 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று(ஏப்ரல் 7) ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(ஏப்ரல் 8) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?