ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஆத்தூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கூட்டம்
ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்களின் குறைகள் கேட்டறியப்பட்டது. மேலும், அவா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ஒப்பந்ததாரா் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.