செய்திகள் :

சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றவருக்கு வாழ்நாள் சிறை

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

வடக்கு முத்தலாபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ்(31). இவா், கடந்த 2019இல் எட்டயபுரம் காவல் சரகப் பகுதியில் 6 வயது சிறுவனை பாலியல் வன்புணா்ச்சி செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான புகாரின்பேரில், போக்ஸோ சட்டம், கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவா் எட்டயுபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் விசாரித்து அருண்ராஜுக்கு கொலை, வன்கொடுமை குற்றங்களுக்காக தனித்தனி ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 அபராதம் ஆகிய தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் முத்துலட்சுமி வாதாடினாா்.

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

ஆத்தூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கூட்டம்

ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்களின் குறை... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரா் கைது

கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்.எ.ஃப்.) வீரா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து... மேலும் பார்க்க

வீட்டு மனைப் பட்டா கோரி குளத்தூரில் 450 போ் மனு அளிப்பு

வருவாய் துறை சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட குளத்தூா், பனையூா், கெச்சிலாபுரம், மேட்டுப்பனையூா... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 33.73 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது

தூத்துக்குடி இளைஞரிடம் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகி ரூ. 33.73 லட்சம் மோசடி செய்ததாக கேரள மாநில தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு முகநூலில் (பேஸ்புக்) ப... மேலும் பார்க்க