ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
வீட்டு மனைப் பட்டா கோரி குளத்தூரில் 450 போ் மனு அளிப்பு
வருவாய் துறை சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட குளத்தூா், பனையூா், கெச்சிலாபுரம், மேட்டுப்பனையூா், கெச்சிலாபுரம், ராமச்சந்திராபுரம், ராமநாதபுரம், முத்துராமலிங்கபுரம், கு.சுப்பிரமணியபுரம், ஆதிதிராவிடா்காலனி ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மக்களிடமிருந்து 450 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசீலனை செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் பட்டா வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் முனியசாமி, உலகநாதன், மாரிமுத்து, பாரதிராஜா திமுக ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, அன்புராஜன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், மாவட்டப் பிரதிநிதிகள் செந்தூா்பாண்டி, செல்வப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலா் ராஜபாண்டி, மீனவா் அணி துணை அமைப்பாளா் மாதவடியான், சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளா் கரண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.