வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு!
மோகன்லாலின் துடரும் வெளியீட்டுத் தேதி!
நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதற்கிடையே, ’சவுதி வெள்ளக்கா' பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 56-வது படமான ’துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான “கண்மணி பூவே” ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக இப்படம் உருவாகியுள்ளது. நாயகியாக நடிகை ஷோபனா நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் ஏப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: வசந்த பாலன்