அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
மாரடைப்பு: மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்; வைரல் வீடியோவில் என்ன நடந்தது?
திடீர் மாரடைப்பு
மகாராஷ்டிராவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வர்ஷா கராட் (20) என்ற மாணவி பராண்டே நகரில் உள்ள ஆர்.ஜி. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையேறி பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசுவதைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிரித்து கைதட்டி ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர். மாணவியும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார்.

மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகம்
அந்நேரம் வர்ஷாவின் பேச்சின் சத்தம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. திடீரென அவர் அப்படியே கீழே விழுந்துவிட்டார்.
அம்மாணவியை உடனே சக மாணவிகள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சோதித்து பார்த்தபோது அவர் இறந்திருந்தார். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவி பேசியபடி மேடையில் மயங்கி விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது.
இருதய ஆபரேசன்
வர்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இருதய ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஆப்ரேசனுக்கு பிறகு மாணவிக்கு எந்தவித பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திருமண நாளில் மரணம்
இதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் தம்பதி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருந்தபோது வாசிம் சர்வார் என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்து போனார்.
தொழிலதிபரான வாசிம் தனது திருமண நாளையொட்டி மனைவியுடன் நடனத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இறந்திருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs