நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
அளவுக்கு அதிகமாக மது; விமானத்தில் ஜப்பான் தொழிலதிபர் மீது சிறுநீர் கழித்த இளைஞர்!
டெல்லியில் இருந்து பேங்காக் சென்ற விமானத்தில் பயணித்த துஷார் (24) என்ற பயணி, விமானத்தில் இரண்டு கிளாஸ் மது வாங்கிக் குடித்தார். அவர் மது அருந்தியவுடன் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. சிறுநீர் கழிக்க அவர் இருக்கையில் இருந்து எழுந்தார்.

ஆனால் அவரால் மேற்கொண்டு நகர முடியவில்லை. இதனால் அப்படியே நின்று கொண்டு அருகில் அமர்ந்திருந்த பயணி மீது சிறுநீர் கழித்துவிட்டார். அவர் சிறுநீர் கழித்த நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அதுவும் ஜப்பானில் கம்பெனி ஒன்றின் உரிமையாளர் ஆவார். இதில் அருகில் இருந்த மற்றொரு பயணியும் பாதிக்கப்பட்டார். இது குறித்து விமான அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தனர்.
ஆனால் அதனை ஏற்காத பயணி பேங்காக்கில் இறங்கிய பிறகு இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து துஷார் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 30 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இது போன்று ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு 2024ம் ஆண்டு குடிபோதையில் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி, வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். 2023ம் ஆண்டு ஆர்யா வோரா என்ற மாணவர் அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டது.