செய்திகள் :

Summer & Cold: வெயில் காலத்திலும் சளி பிடிக்குமா? - மருத்துவர் விளக்கம்!

post image

பனி காலத்துலதான் சளி பிடிக்கும். ஆனால், வெயில் காலத்தில் சளி பிடிக்காது என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மையில் கோடையில்தான் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார் பொது நல மருத்துவர் பி.எம்.கலைச்செல்வன்.

''வெப்பத்தால் அவதிப்படும்போது, குளிர்பானங்கள் அல்லது ஐஸ் வாட்டரை விரும்பிக் குடிக்கின்றனர். இது தவறு. வெப்பம் காரணமாக, நமது தொண்டை இருக்கும் பேரின்க்ஸ் (Pharynx) என்ற பகுதி சற்று வெப்பமாக இருக்கும். அப்போது, குளிர்ந்த நீரையோ பானத்தையோ குடிக்கும்போது, தொண்டை கட்டிவிடும். கார்பனேட்டட் பானங்கள் தொண்டைக்கு இதமாக இருப்பது போல தோன்றினாலும், அவை நமது தொண்டையில் இருக்கும், மெல்லிய திசுக்களை அரித்துவிடும். இதனால், தொண்டையில் எளிதில் நோய்த் தொற்று வரலாம்.

வியர்வை சொட்டச் சொட்ட தலைக்குக் குளித்தால் கண்டிப்பாக ஜலதோஷம் ஏற்படும்.
வியர்வை சொட்டச் சொட்ட தலைக்குக் குளித்தால் கண்டிப்பாக ஜலதோஷம் ஏற்படும்.

வியர்வை சொட்டச் சொட்ட தலைக்குக் குளிப்பது, குளித்த பின் தலையைச் சரியாகத் துவட்டாமல் இருப்பது, வெயிலில் அலைந்துவிட்டு, உடனடியாக ஏ.சி அறைக்குள் நுழைவது போன்றவற்றால் கண்டிப்பாக ஜலதோஷம் ஏற்படும்.

சென்ட்ரலைஸ்டு ஏ.சியினாலும், ஜலதோஷம் வர அதிக வாய்ப்பு உண்டு. ஏ.சி காற்று வெளியே செல்லாதிருக்க, ஜன்னல்களும் மூடப்பட்டே இருக்கும். அலுவலகத்தில் யாருக்கேனும் ஜலதோஷம் இருந்து, அவர்கள் தும்மினாலோ, இருமினாலோ அந்தக் காற்று ஏ.சி மூலமாக, அலுவலகத்தின் மற்ற இடங்களுக்குச் சுழலும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்தக் காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷம் தொற்றும்.

டும் வெயிலில், காற்றில் உள்ள ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால், காற்று லேசாகி தூசி, துரும்புகள் மற்ற காலத்தைவிட பெருமளவு காற்றில் சுழலும். இந்த தூசுக்களால் அலர்ஜியும் ஜலதோஷமும் வரலாம்.

‘ஜில்’லெனக் குடித்தால் தாகம் தணியும் என்று, நம் தேவையைவிட குறைவாகவே நீரை அருந்துவோம்.
‘ஜில்’லெனக் குடித்தால் தாகம் தணியும் என்று, நம் தேவையைவிட குறைவாகவே நீரை அருந்துவோம்.

வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும் குளிர்ச்சியாக எதையும் பருகக் கூடாது. 10 நிமிடங்கள் கழித்து, இளநீர், ஜூஸ், மோர் பருகலாம்.

‘ஜில்’லெனக் குடித்தால் தாகம் தணியும் என்று, நம் தேவையைவிட குறைவாகவே நீரை அருந்துவோம். இதனால், உடல் டீஹைட்ரேட் ஆகலாம்.

ளி பிடித்தால் மிதமான வெந்நீரில் குளித்து, மூக்கினை லேசாகச் சிந்துங்கள். தலைக்குக் குளிப்பதை ஓரிரு நாட்கள் தவிர்க்கவும்.

வியர்வையுடன் வந்தாலும், சிறிது நேரம் கழித்த பிறகே குளிக்கச் செல்லவும். தலை வியர்த்து இருந்தால், நன்றாக உலர்த்திய பிறகு தலைக்குக் குளிக்கவும்.

லைக்குக் குளித்தவுடன் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் தலையைத் துவட்டுவது நல்லது.

பழ வகைகளை மிதமாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.
பழ வகைகளை மிதமாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.

நாம் தும்மும்போது மட்டுமின்றி, பிறர் தும்மும்போதும் நம் மூக்கையும் வாயையும் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.

ளநீர், நீர் மோர், வெள்ளரிப் பிஞ்சு, பழ வகைகளை மிதமாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.

வாய் கொப்பளிக்க வெந்நீரும், குடிப்பதற்குக் கதகதப்பான நீரும் நல்லது.

துளசி, ஓமவல்லி இலைகளை வெந்நீரில் போட்டு, ஆவி பிடிப்பது மூக்கடைப்புக்கு நல்ல தீர்வைத் தரும்'' என்கிறார் டாக்டர் பி.எம்.கலைச்செல்வன்.

Health: தெரிந்த சோளம்; தெரியாத தகவல்கள்... சொல்கிறார் உணவியல் நிபுணர்!

சோளம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? கடற்கரைக்குச் சென்றாலே நம் கண்கள் முதலில் தேடுவது சோளக்கடைகளைத்தான். புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் என இதில் இல்லாத சத்துக்க... மேலும் பார்க்க

மூக்கை சுத்தம் செய்யும் Neti pot - யார், எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்?

சில நாட்களாக ரீல்ஸ்களில் நெட்டி பாட் (neti pot) மூலம் மூக்கை சுத்தம் செய்யும் முறை ட்ரெண்ட் ஆகி வருவதை பார்த்திருப்போம். மூக்கை சுத்தம் செய்யும் இந்த முறை பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவ முறையில் பின்ப... மேலும் பார்க்க

Health: அறுசுவை உடலில் அதிகமானால், குறைந்தால் என்னவாகும்? - முழுமையான அலசல்!

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறையில், அறுசுவை உணவே, சமச்சீரான உணவாகச் சொல்லப்படுகிறது. இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவை உணவுகளைச் சாப்பிடும்போது, அவை ஏழு விதமான தாத... மேலும் பார்க்க

”இந்த நொடி வரை எந்த சந்தோஷத்தையும் அனுபவிச்சதில்ல” - கலெக்டரிடம் உதவி கேட்டு கலங்க வைத்த முதியவர்

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம சுப்ரமணியன் (65). உடம்பே தெரியாத அளவுக்குச் சிறு மற்றும் பெரிய கட்டிகள் இவர் உடல் எங்கும் உள்ளன. கலங்கிய கண்களும், எதாவது நல்லது ... மேலும் பார்க்க

இரும்புச்சத்து குறைபாடு முதல் ஆண்மைக் குறைபாடு வரை... சப்போர்ட் செய்யும் சப்போட்டா!

சுவை மிகுந்த, கலோரி நிறைந்த சப்போட்டா ஆரோக்கியத்துக்கும் சப்போர்ட்டாக இருக்கிறது. உடலுக்குச் சத்தை அளிப்பதோடு, சருமத்துக்கும் பலன் அளிக்கிறது என்கிறார் பெரம்பலூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் பாலசு... மேலும் பார்க்க

Summer: குளியல் முதல் கொஞ்சூண்டு ஐஸ்க்ரீம் வரை... குழந்தைகளுக்கு கூல் டிப்ஸ்!

வெயிலில் குழந்தைகள் விளையாடும்போது வியர்வை அதிமாக வெளியேறி, நீரிழப்பு ஏற்படும். அதைத் தவிர்க்க, அவர்களை அதிகம் தண்ணீர் குடிக்கவைக்க வேண்டும். 3-5 வயதுவரையுள்ள குழந்தைகள் வழக்கமாகக் குடிப்பதைவிட ஒரு லி... மேலும் பார்க்க