செய்திகள் :

Summer: குளியல் முதல் கொஞ்சூண்டு ஐஸ்க்ரீம் வரை... குழந்தைகளுக்கு கூல் டிப்ஸ்!

post image

வெயிலில் குழந்தைகள் விளையாடும்போது வியர்வை அதிமாக வெளியேறி, நீரிழப்பு ஏற்படும். அதைத் தவிர்க்க, அவர்களை அதிகம் தண்ணீர் குடிக்கவைக்க வேண்டும். 3-5 வயதுவரையுள்ள குழந்தைகள் வழக்கமாகக் குடிப்பதைவிட ஒரு லிட்டர் அதிகமாகவும், 6-8 வயதுவரையுள்ளவர்கள் ஒன்றரை லிட்டர் அதிகமாகவும், 9-13 வயதுவரையுள்ள குழந்தைகள் 2 லிட்டர் அதிகமாகவும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

summer tips
summer tips

குழந்தைகளின் பாதங்களைப் பாதுகாக்க, ஷூ அணியத் தேவையில்லாத இடங்களில் செருப்புகளையே அணிந்துசெல்ல வையுங்கள். ஷூ அணிந்தே ஆகவேண்டியிருந்தால் காட்டன் சாக்ஸ் மட்டுமே அணிய வேண்டும். ஒரு முறை அணிந்த சாக்ஸை துவைக்காமல் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இறுக்கமான ஷூ, காலணிகளால் விரல் இடுக்குகளில் வியர்த்து, தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கோடைக்காலத்தில் டைபாய்டு, காலரா, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமலிருக்க, வீட்டில் தயாரிக்கப்படும் சுகாதாரமான உணவுகளை மட்டுமே சாப்பிடவைக்க வேண்டும். தெருவில், உணவகங்களில் விற்கப்படும் பண்டங்கள் சுகாதாரமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.

summer tips
summer tips

தூய்மையான பருத்தி உடைகளை மட்டுமே அணிவியுங்கள். இறுக்கமில்லாத தளர்வான உடைகள் ஏற்றவை. வெளிர் நிற உடைகள் வெப்பதை உள்ளே இழுக்காமல் பிரதிபலிக்கும் என்பதால், அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். அடர் நிற உடைகளைத் தவிர்க்கலாம். வெயிலில் வெளியே செல்லும்போது பயன்படுத்தும் குடையும் கறுப்பு நிறத்தில் இல்லாமல், வெள்ளை, நீலம் போன்ற சற்று வெளிர் நிறத்தில் இருப்பது நல்லது.

பாக்கெட், டின்களில் அடைக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்டு விற்கப்படும் பானங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக் கூடாது. அவற்றுக்கு பதிலாக, இளநீர், மோர், ஃப்ரெஷ் ஜூஸ் கொடுக்கலாம். கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு நீராகாரம் கொடுக்கலாம். ஆரோக்கியமான பானம் இது.

குழந்தைகளால் ஐஸ்க்ரீம் ஆசையை அடக்க முடியாது. எனவே, நன்கு சுகாதாரமான முறையில் ஐஸ்க்ரீம் தயாரித்து, பாதுகாத்து, விற்பனை செய்யும் கடைகளில் குறைந்த அளவில் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தினமும் அல்லது அடிக்கடி ஐஸ்க்ரீம் வாங்கித் தருவதைத் தவிர்க்கவும்.

காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை, சூரியக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகள் வெயிலில் விளையாடினால் அதிகளவில் வியர்வை சுரந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படும். எனவே, அந்த நேரத்தில் அவர்களை வெளியே விளையாட விடாமல் வீட்டுக்குள் ஆடும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.

summer tips
summer tips

கூந்தல் அதிகமிருக்கும் பெண் குழந்தைகளுக்கு. அவர்கள் விளையாடிவிட்டு வந்ததும், ஃபேன் காற்றில் அவர்களின் கூந்தலை நன்கு உலரவிட வேண்டும். இல்லையென்றால், பொடுகு, நீர்க்கோத்தல் உள்ளிட்டவை ஏற்படலாம்.

தினமும் இரண்டு முறை குழந்தைகளைக் குளிக்கவைக்க வேண்டும். இரண்டு முறையும் தலைக்குக் குளிக்கவைக்கலாம். இயலாதவர்கள், காலையில் மட்டுமாவது குழந்தைகளை அவசியம் தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்.

summer tips
summer tips

கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு என பேக் தயார் செய்யலாம். அதில், தொப்பி, கண்ணாடி, குடை, ஹேண்ட் வாஷ், கைக்குட்டை அல்லது சிறு துண்டு, தண்ணீர் பாட்டில், ஓ.ஆர்.எஸ் கரைசல் பவுடர், இளநீர், நீர் மோர், வெள்ளரி, பதநீர் போன்றவற்றை வைத்திருக்கலாம்.

Health Drink: காலை பதநீரும், மாலை பதநீரும்... அசல் பதநீரைக் கண்டறிய முடியுமா?

பனையில் ஆண் பனையை அலகுப்பனை என்றும், பெண் பனையை பருவப்பனை என்றும் சொல்கிறார்கள். பெண் பனையிலிருந்து நுங்கு கிடைக்கும். ஆனால், ஆண், பெண் இரண்டு பனைகளில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். ஆனால், பெண் பனையில்... மேலும் பார்க்க

பிரியாணி மசாலாக்களின் மருத்துவப் பலன்கள் தெரியுமா? சித்த மருத்துவர் சொல்வது என்ன?

பிரியாணி எல்லோருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, வார இறுதி நான்வெஜ் பிரியாணியாக மாறி, இப்போது மிட்நைட் பிரியாணியாக ஃபேமஸ் ஆகிவிட்டது. பிரியாணி அதிக கலோரியைக் கொடுக்கக்... மேலும் பார்க்க

Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

கால் வலிக்கும், ரத்த நாளங்களின் அடைப்புக்கும் தொடர்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார், திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த வாஸ்குலர் அண்ட் எண்டோ வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் அருணகிரி விருத்தகிர... மேலும் பார்க்க

மதுரை: ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு; அரசு மருத்துவமனை வருபவர்களுக்காகச் சேவை; அசத்தும் அமைப்பு

தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.அப்படி வருகின்றவர்களுக்குத் தினமும் 3 ஆயிரம் வீதம் கடந்த ... மேலும் பார்க்க

Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, ஆண்டு முழுவதும் கிடைக்கிற இளநீரே சுவையான தீர்வு. இளநீரின் ஆரோக்கிய பலன்கள் பற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: 17 வயது மகளுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110: சாதாரணமானதா, கவலைக்குரியதா?!

Doctor Vikatan: என்மகளுக்கு17 வயதாகிறது. சமீபத்தில்தான் அவளுக்கு போர்டு எக்ஸாம் முடிந்திருக்கிறது. அதன் காரணமாக தூக்கமில்லாமலும்அதிக ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனக்கு சுக... மேலும் பார்க்க