செய்திகள் :

பிரியாணி மசாலாக்களின் மருத்துவப் பலன்கள் தெரியுமா? சித்த மருத்துவர் சொல்வது என்ன?

post image

பிரியாணி எல்லோருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, வார இறுதி நான்வெஜ் பிரியாணியாக மாறி, இப்போது மிட்நைட் பிரியாணியாக ஃபேமஸ் ஆகிவிட்டது.

பிரியாணி அதிக கலோரியைக் கொடுக்கக்கூடிய உணவு என்பதால் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தும் நிலையில், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் பிரியாணியை மருத்துவ உணவு என்கிறார். அது எப்படி என்றோம் அவரிடம்.

பிரியாணி மசாலா
பிரியாணி மசாலா

''முகலாயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரியாணி அன்றைக்கு நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடலை வலுவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கும் கொடுக்கப்பட்டது.

ஆனால், இன்றைக்கு அது மாறிவிட்டது. இருப்பினும், அதில் சேர்க்கப்படும் மசாலாக்களின் மூலம் இன்றளவும் அதில் மருத்துவக் குணங்கள் உள்ளன.

பிரியாணி மசாலாவில் இருக்கும் நறுமண மூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளான, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை, கிராம்பு என ஒவ்வொன்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன.

வளைகுடா இலை என்று சொல்லக்கூடிய பிரியாணி இலை செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை எளிதாக்கும்.

வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

இதில் இருக்கிற ரூட்டின் (Rutin) மற்றும் கெஃபைக் (caffeic) அமிலம் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், ரத்தக்கொதிப்பையும் கட்டுக்குள் வைக்கிறது.

ஜாதிக்காய்
ஜாதிக்காய்

ஜாதிக்காய், ஜாதிக்காய் விதையை மூடியிருக்கும் லேயரான ஜாதிபத்திரி இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்துகிறது.

செரிமான பாதையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஜாதிக்காயில் உள்ள வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை மேம்படுத்தும். பல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

'ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.

குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள்.

பிரியாணியில் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நமது உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ரத்தக்குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க உதவும்.

திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கருப்பைச் சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், மந்தம், இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்குச் சோம்பு சிறந்த தீர்வு தரும் எனச் சித்த மருத்துவப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நவீன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கற்பாசி
கற்பாசி

செரிமான நொதிகளைத் தூண்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, அதிகப்படியான வாய்வு மற்றும் வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கிறது.

மூட்டு வலி, தசை வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளுக்குக் கற்பாசி சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டிபயாடிக், சிறுநீர்ப்பாதை தொற்று மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கற்பாசிக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக சரும நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைச் சிதைத்து, தேகத்தைக் காக்கும் தன்மை கற்பாசிக்கு உண்டு.

இதிலுள்ள வேதிப்பொருட்கள் கல்லீரலுக்குக் கவசமாகச் செயல்பட்டு, கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

வயிற்றுப் புண்களுக்குக் காரணமான `ஹெலிகோபாக்டர் பைலோரி’யின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கற்பாசிக்கு இருக்கிறது.

ஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண் மற்றும் வலியைப் போக்கும். வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வீக்கம் ஆகியவற்றைச் சரி செய்யும்.

ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நம் உடலை ஆரோக்கியமானதாகவும், உள்ளுறுப்புகளைச் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும்.

சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

ஏலக்காயின் முக்கிய கனிமமான பொட்டாசியம் ரத்தக் கட்டிகள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றைத் தடுக்கும்.

கிராம்பு
கிராம்பு

நறுமண மூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது.

மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக்கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, காது தொடர்பான நோய்கள், சரும நோய்கள் எனப் பலவற்றை நீக்கும் திறன் கொண்டது.

வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாவுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது.

வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக்கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.

கிராம்பு `ஹெபடைடிஸ்’ வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலவங்கப்பட்டையில்லாமல் பிரியாணியா? வாய்ப்பே இல்லை! பிரியாணியைத் தாங்கிப்பிடிப்பதே பட்டையின் பிரத்யேக மணம்தான்.

பிரியாணிக்குள் தனது சாரத்தை இறக்கி, செரிமானத்தைத் தூண்டும் இனிமையான வஸ்து லவங்கப்பட்டை.

லவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு வேதிப்பொருள் ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், வளர்சிதை மாற்றத்தைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

தவிர, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

பட்டை
பட்டை

செரிமானத்தை மேம்படுத்தவும், இரைப்பை குடல் பிரச்னைகளைத் தணிக்கவும் உதவுகிறது. இரைப்பைக் குழாயில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், அஜீரணம் மற்றும் பிற வயிறு தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும்.

இதய ஆரோக்கியத்திற்கான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நுரையீரல் தொடர்பான நோய்கள், வாதநோய்களுக்குச் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வீரியம் இதில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பசியைத் தூண்டக்கூடிய, வாயுவை அகற்றக்கூடிய உணவுப் பொருளாக நெடுங்காலமாக உணவுகளில் அன்னாசிப்பூ சேர்க்கப்படுகிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். கருப்பைக் கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும். இதிலுள்ள மருத்துவக் கூறுகள், ஆழ்ந்த உறக்கத்தையும் வரவழைக்கும்.

அன்னாசிப்பூ!
அன்னாசிப்பூ!

வாய்ப்புண் உள்படப் பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்துகிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எரிச்சலைக் குறைக்கும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்தலைக் குறைகிறது. கொத்தமல்லி விதைகளில் இருக்கிற ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது.

பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாக்கள், அதற்குச் சுவையை அளிப்பதுடன் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அதே நேரம், உணவே மருந்து என்பதை உணர்ந்து பிரியாணியை அளவோடு உண்டால் அதிலிருக்கிற மசாலாக்கள் நமக்குப் பல நன்மைகளைச் செய்யும் என்கிறார் டாக்டர் விக்ரம் குமார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Health Drink: காலை பதநீரும், மாலை பதநீரும்... அசல் பதநீரைக் கண்டறிய முடியுமா?

பனையில் ஆண் பனையை அலகுப்பனை என்றும், பெண் பனையை பருவப்பனை என்றும் சொல்கிறார்கள். பெண் பனையிலிருந்து நுங்கு கிடைக்கும். ஆனால், ஆண், பெண் இரண்டு பனைகளில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். ஆனால், பெண் பனையில்... மேலும் பார்க்க

Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

கால் வலிக்கும், ரத்த நாளங்களின் அடைப்புக்கும் தொடர்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார், திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த வாஸ்குலர் அண்ட் எண்டோ வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் அருணகிரி விருத்தகிர... மேலும் பார்க்க

மதுரை: ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு; அரசு மருத்துவமனை வருபவர்களுக்காகச் சேவை; அசத்தும் அமைப்பு

தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.அப்படி வருகின்றவர்களுக்குத் தினமும் 3 ஆயிரம் வீதம் கடந்த ... மேலும் பார்க்க

Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, ஆண்டு முழுவதும் கிடைக்கிற இளநீரே சுவையான தீர்வு. இளநீரின் ஆரோக்கிய பலன்கள் பற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: 17 வயது மகளுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110: சாதாரணமானதா, கவலைக்குரியதா?!

Doctor Vikatan: என்மகளுக்கு17 வயதாகிறது. சமீபத்தில்தான் அவளுக்கு போர்டு எக்ஸாம் முடிந்திருக்கிறது. அதன் காரணமாக தூக்கமில்லாமலும்அதிக ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனக்கு சுக... மேலும் பார்க்க

Summer Skin Problems: வியர்வை, வேனல்கட்டி, அரிப்பு, படர்தாமரை... தீர்வு என்ன?

கோடைக்காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் சார்ந்து ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு.SUMMERSummer Heal... மேலும் பார்க்க