செய்திகள் :

Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்!

post image

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, ஆண்டு முழுவதும் கிடைக்கிற இளநீரே சுவையான தீர்வு. இளநீரின் ஆரோக்கிய பலன்கள் பற்றி சொல்கிறார்கள் நிபுணர்கள்.

இளநீர்
இளநீர்

''நமக்குத் தேவையான பல சத்துகளைத் தன்னுள்ளே கொண்டிருப்பது இளநீர். குறைந்த அளவு, வெறும் 46 (சுமார்) கலோரிகளைக் கொண்டது. இதனடிப்படையில் உடல் பருமனைக் குறைக்க இளநீரைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. நல்ல கொழுப்பை அதிகரித்து (HDL) கெட்டக் கொழுப்பைக் (LDL) குறைக்க உதவும்; உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை (Metabolic rate) அதிகரிக்கும், இதனால் தைராய்டு சுரப்பிகூட நன்றாக வேலை செய்யத் தொடங்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்; இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும். இரண்டாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு சலைனுக்குப் பதில் இளநீர் செலுத்தினார்கள் என்பது வரலாறு.

பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் நார்ச்சத்து கிடையாது. ஆனால், ஒரு டம்ளர் இளநீரில் சுமார் மூன்று கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து, உணவு சட்டென்று குடலில் உறிஞ்சப்படுவதைத் தவிர்த்து, உணவு மிக மெதுவாகச் செரிமானமாகி உறிஞ்ச உதவும். எனவே, குறைந்த இடைவெளியில் பசி ஏற்படுவதையும் தவிர்க்கும். வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தாமல், வயிற்றை நிரப்புவதில் இளநீருக்கு நிகர் ஏதுமில்லை.

பசி ஏற்படுவதையும் தவிர்க்கும் இளநீர்
பசி ஏற்படுவதையும் தவிர்க்கும் இளநீர்

மிக முக்கியமான கனிமச் சத்துக்களில் ஒன்று பொட்டாசியம். அது இளநீரில் அதிகமிருக்கிறது. சாப்பிடும் உணவைச் சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. இளநீரில் சுமார் இரண்டு கிராம் புரதம் இருக்கிறது. இது, பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.''

''கொழுப்புச்சத்தே இல்லாதது இளநீர். இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன. பகலில் பழச்சாறுகள் குடிப்பவர்கள், அதற்குப் பதிலாக தினமும் இளநீர் குடிப்பது நல்லது.

பழச்சாறுகளில்கூட வெள்ளைச் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டு, பழத்தின் முழுச்சத்துகளும் கிடைக்காமல் போகலாம். இளநீரில் அது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை.

கிட்னி ஸ்டோன்
கிட்னி ஸ்டோன்

இளநீர் குடிப்பது, உடலில் வறட்சி, சருமப் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க உதவும். மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும். இளநீரின் வழுக்கைப் பகுதியை ஒதுக்கிவிடக் கூடாது. தினமும் இளநீர் குடிப்பதால் சிறுநீரகக்கல், கீல்வாதம், அழற்சி போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பிணிகள் இளநீர் குடித்தால் ஃபோலேட் (Folate) சத்து கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் தங்கள் உணவில் உள்ள கலோரிகள் அனைத்தையும் ஒதுக்கத் தொடங்குவார்கள். அரிசி வகை உணவுகளைத் தவிர்ப்பார்கள்; சர்க்கரையை ஒதுக்குவார்கள்; ஜூஸ் குடிப்பார்கள். உண்மையில் 117 கலோரி வரை இருக்கும் ஜூஸை குடிப்பதற்குப் பதிலாக, சுமார் 46 கலோரிகள் வரையிருக்கும் இளநீரை தினமும் குடிப்பது, கொழுப்புச்சத்து ஏற்படாமல் உடலைக் காக்கும்.

உடல் பருமன் குறைக்கும்
உடல் பருமன் குறைக்கும்

இளநீரிலிருந்து கிடைக்கும் சத்துகளில் முக்கியமானது, நார்ச்சத்து. இளநீர் ஒன்றில் 2.6 கிராம் வரை நார்ச்சத்து இருக்கிறது. `ஒருவர் அதிகளவு நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், அவருடைய உடல் எடை குறையத் தொடங்கும்’ என்பது ஆய்வு ஒன்றின் முடிவு. உணவிலிருந்து கொழுப்புச்சத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள் இளநீரை மட்டும் அருந்தலாம்.

உடற்பயிற்சி செய்பவர்கள், தங்களது பயிற்சியை முடித்ததும், ஆற்றல் கிடைக்க குளிர்பானங்களைக் குடிப்பார்கள். சில குளிர்பானங்கள் வாந்தி, வயிற்றுப்போக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் பிரச்னையை எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் சரிசெய்யக்கூடிய அருமருந்து, இளநீர்.

இளநீர்
இளநீர்

ஊட்டச்சத்து நிறைந்த இளநீரால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் கொண்டது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இளநீர் அருந்த வேண்டும். இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுடன் இருப்பவர்களுக்கு பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களும் அடிக்கடி இளநீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.''

பிரியாணி மசாலாக்களின் மருத்துவப் பலன்கள் தெரியுமா? சித்த மருத்துவர் சொல்வது என்ன?

பிரியாணி எல்லோருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, வார இறுதி நான்வெஜ் பிரியாணியாக மாறி, இப்போது மிட்நைட் பிரியாணியாக ஃபேமஸ் ஆகிவிட்டது. பிரியாணி அதிக கலோரியைக் கொடுக்கக்... மேலும் பார்க்க

Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

கால் வலிக்கும், ரத்த நாளங்களின் அடைப்புக்கும் தொடர்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார், திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த வாஸ்குலர் அண்ட் எண்டோ வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் அருணகிரி விருத்தகிர... மேலும் பார்க்க

மதுரை: ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு; அரசு மருத்துவமனை வருபவர்களுக்காகச் சேவை; அசத்தும் அமைப்பு

தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.அப்படி வருகின்றவர்களுக்குத் தினமும் 3 ஆயிரம் வீதம் கடந்த ... மேலும் பார்க்க

Doctor Vikatan: 17 வயது மகளுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110: சாதாரணமானதா, கவலைக்குரியதா?!

Doctor Vikatan: என்மகளுக்கு17 வயதாகிறது. சமீபத்தில்தான் அவளுக்கு போர்டு எக்ஸாம் முடிந்திருக்கிறது. அதன் காரணமாக தூக்கமில்லாமலும்அதிக ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனக்கு சுக... மேலும் பார்க்க

Summer Skin Problems: வியர்வை, வேனல்கட்டி, அரிப்பு, படர்தாமரை... தீர்வு என்ன?

கோடைக்காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் சார்ந்து ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு.SUMMERSummer Heal... மேலும் பார்க்க

Physical Vs chemical sunscreen: எது சருமத்திற்கு பாதுகாப்பானது? - Doctor Tips

ஸ்கின் கேரில் முக்கியமான ஒன்று சன் ஸ்கிரீன். வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுவதில் ஒன்று இந்த சன் ஸ்கிரீன். இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் மருத்... மேலும் பார்க்க