போக்குவரத்து அபராதங்களை கட்ட தவறினால் ஓட்டுநா் உரிமம் தற்காலிக ரத்து
Physical Vs chemical sunscreen: எது சருமத்திற்கு பாதுகாப்பானது? - Doctor Tips
ஸ்கின் கேரில் முக்கியமான ஒன்று சன் ஸ்கிரீன். வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுவதில் ஒன்று இந்த சன் ஸ்கிரீன்.
இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் சருமத்திற்கு ஏற்ற சமஸ்கிரீனை எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
எந்த வகையான சன் ஸ்கிரீன் சருமத்திற்கு பாதுகாப்பானது? எதனை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா கூறுகிறார்.

சன் ஸ்கிரீன்கள் பல வகைகளில் உள்ளன. கெமிக்கல் சன்ஸ்கிரீன், பிசிகல் சன்ஸ்கிரீன் குறித்து பார்க்கலாம்.
கெமிக்கல் சன்ஸ்கிரீன்கள்
கெமிக்கல் சன்ஸ்கிரீன்கள் சூரியனின் கதிர்களால் வெப்பம் ஆகி சருமத்தில் உறிஞ்ச நேரிடும். இதில் சில பாதுகாப்பான இன்க்ரிடியன்ட்ஸ் உள்ள கெமிக்கல் சன் ஸ்கிரீன்களை மருத்துவர் கூறியிருக்கிறார். Bimotrizinol அல்லது tinosorb s இருக்கும் சன் ஸ்கிரீனை நீங்கள் தேர்வு செய்யலாம் என்று கூறுகிறார்.
endocrine disruption-octinoxate, oxybenzone,octocrylene போன்ற மூலப் பொருள்கள் இருக்கும் சன் ஸ்கிரீனை நீங்கள் தவிர்க்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

ஃபிசிகல் சன்ஸ்கிரீன்
இந்த வகை சன் ஸ்கிரீன் உங்கள் சருமத்திற்கு ஒரு கேடயமாக செயல்படுகிறது. புற ஊதா கதிர்களைத் தடுத்து அவற்றை அப்படியே திருப்பி விடுகிறது. சருமத்திற்குள் செல்லாது.
Zinc oxide,Titanium dioxide போன்றவை ஃபிசிகல் சன் ஸ்கிரீனில் பாதுகாப்பானது என்று கூறுகிறார் மருத்துவர். இவற்றை முகத்தில் பயன்படுத்தும் போது ஒயிட் காஸ்ட் எனப்படும் வெள்ளை பூசியது போன்று காணப்படும், இதுதான் முகத்திற்கு ஒரு கேடயமாக செயல்பட்டு அப்படியே சூரிய கதிர்களை திருப்பி விடுகிறது என்கிறார் மருத்துவர். எனவே இதனை பயன்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பானது என்கிறார் மருத்துவர் கோல்டா.