ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
கொளுத்தும் வெயிலுக்கு டீ குடிக்கலாமா? - இதனால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?
கோடை வெயிலாக இருந்தாலும் சரி, மழை மேகமாக இருந்தாலும் சரி, சிலர் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக சூடான சம்மரில் எப்படி டீ குடிக்கிறார்கள் என்று யோசித்திருப்போம்.
ஆனால் கோடை காலத்தில் டீ குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஒருவருக்கு அந்த நாளே டீ-யில் தான் தொடங்கும். டீ குடித்தால் தான் ஒரு வேலையை செய்ய முடியும் என்று நம்புவார்கள்.
இந்தக் கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் அப்போதுதான், சூட்டை தணிக்க முடியும் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் டீ குடிப்பதாலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது.
ஒல்லி ஜே வெளியிட்ட ஒரு ஆய்வில் உடல் சூடான பானத்தை உட்கொண்ட பிறகு இருக்கும் வெப்ப சேமிப்பு, குளிர்பானங்கள் அருந்திய பிறகு இருக்கும் வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவர் தேநீர் அருந்தியுடன், அவரது உடலில் வெப்பம் அதிகரித்து வியர்வை சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. அதன் பின்னர் அந்த வியர்வை ஆவியாகி உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது.
உதாரணமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு பானம் உடலுக்குள் செல்கிறது என்றால், 570 மில்லி வியர்வை ஏற்படுகிறது. ஆவியாதல் காரணமாக உடலில் உள்ள வெப்பம் குறைகிறது.
அதே வேலையில் குளிர்பானங்கள் அல்லது குளிர்ச்சியாக ஏதேனும் சாப்பிட்டால் உடலில் வெப்பம் அதிகரிக்க செய்கிறது. அதாவது குளிர்ச்சியான பானத்தை உட்கொண்ட பிறகு தோலின் மேற்பரப்பிலிருந்து வியர்வை ஆவியாதல் குறைவதால் வெப்பம் உடலில் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
உடலின் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சகிப்புத்தன்மையை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கோடை காலத்திலும் டீ தாராளமாக அருந்தலாம்!