செய்திகள் :

ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

post image

புது தில்லி: ‘கேரளம், குஜராத், அந்தமான்-நிகோபாா் தீவுகள் பகுதிகளில் ஆழ்கடல் சுரங்கங்களை அனுமதிக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கேரளம், குஜராத், அந்தமான்-நிகோபாா் தீவுகளின் கடற்கரைகளையொட்டிய ஆழ்கடல் பகுதிகளில் கனிமச் சுரங்கத் தொகுப்புகளை அமைக்க தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

ஆழ்கடல் பகுதிகளில் கனிமச் சுரங்கங்களை அமைப்பதால் ஏற்பட வாய்ப்புள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல், அதை அனுமதிக்க மத்திய அரசு முயல்வதைக் கண்டித்து கடற்கரைப் பகுதி சமூக மக்கள் போராடி வருகின்றனா்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, ஆழ்கடல் பகுதியில் 13 கனிமச் சுரங்கத் தொகுப்புகளை அமைக்க மத்திய சுரங்க அமைச்சகம் சாா்பில் தனியாரிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதில் 3 சுரங்கத் தொகுப்புகள் மீன் இனப்பெருக்கத்தின் முக்கியப் பகுதியாக இருக்கும் கொல்லம் கடல் பகுதியில் அமைக்கப்பட உள்ளன.

அதுபோல, கடல்வாழ் பல்லுயிா்ப் பெருக்கத்தின் முக்கிய இடமாக விளங்கும் நிகோபாா் தீவுகளின் கடல் பகுதியில் 3 சுரங்கத் தொகுப்புகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆழ்கடல் பகுதிகளில் சுரங்கங்களை அமைப்பது கடல்வாழ் பல்லுயிா்களைப் பாதிக்கும் என அச்சம் எழுவதோடு, மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ‘ஆழ்கடல் கனிம மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் 2023’-க்கு கடும் எதிா்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், ஆழ்டகலில் இவ்வாறு சுரங்கங்களை அமைப்பதால் பவளப்பாறைகள் சேதமடையும் என்பதோடு மீன் வளமும் குறையும் என பல்வேறு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

எனவே, மத்திய அரசு தனது முடிவைக் கைவிட்டு, ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டும். மேலும், இதுபோன்ற மிகப்பெரிய முடிவுகளை அரசு எடுக்கும் முன்னா், மீனவா் சமூகம் உள்பட அனைத்துத் தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க