Ananya: `படிப்பு முக்கியம்; ஐ.ஏ.எஸ் ஆகணும்!' - சுப்ரீம் கோர்டை திரும்பி பார்க்க ...
வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு
வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து, சட்டத் திருத்தத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
”வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பல்வேறு சமூகத்தை சேர்ந்த 284 குழுக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனையும் வழங்கினர். 25 மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், வக்ஃப் வாரியங்களும் கருத்து தெரிவித்துள்ளன.
யாரெல்லாம் இந்த மசோதவை எதிர்த்தார்களோ அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். 1995 ஒட்டுமொத்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது அரசியலமைப்பு எதிரானது, சட்டத்துக்கு புறம்பானது என்று யாரும் தெரிவிக்கவில்லை. ஆனால், இன்று நாங்கள் சீர்திருத்தங்கள் கொண்டுவரும்போது எதிர்க்கிறீர்கள். இந்த மசோதாவுக்கு தொடர்பே இல்லாத விஷயங்கள் பற்றி பேசி மக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்.
வக்ஃப் வாரியத்தின் அம்சங்களில் வேறெந்த சட்டமும் அதிகாரம் பெற முடியாது என்று இருந்தது. இதுபோன்ற அம்சத்தை நம் நாட்டில் எப்படி அனுமதிக்க முடியும்.
வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவில்லை என்றால் நம் நாடாளுமன்ற கட்டடம், விமானம் நிலையத்தைகூட அவர்களது சொத்து என்பார்கள்.
வக்ஃப் வாரியம் மட்டுமல்ல எந்த மதம் சார்ந்த விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. கோயில், மசூதி நிர்வாகத்தில் நாங்கள் தலையிடவில்லை. சொத்துகளின் மேலாண்மையில் மட்டுமே தலையிடுகிறோம்.
2013 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற சமயத்தில் நகர்புற வளர்ச்சித் துறை கீழ் வரும் 123 சொத்துகளை தில்லி வக்ஃப் வாரியத்துக்கு காங்கிரஸ் அரசு மாற்றி எழுதியிருக்கிறது. இதனால் வாக்கு வங்கி அதிகரிக்கும் என நினைத்தார்கள். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டனர்.
திருத்தப்பட்ட விதிகளில் பின்பற்றப்பட்ட இஸ்லாமியர்கள், பெண்கள் என அனைத்து தரப்பட்டவர்களையும் கொண்டுவந்துள்ளோம். நான் முஸ்லிம் அல்ல, ஆனால் மத்திய வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருக்கிறேன். முஸ்லிம் அல்லாதவர்களும் பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்திய ரயில்வே, பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை வைத்திருக்கிறது வக்ஃப் வாரியம். அதில் சீர்திருத்தங்களை கொண்டுவர விரும்புகிறோம்.
ரயில்வேவின் சொத்துகளும் ராணுவம் பாதுகாக்கும் சொத்துகளும் அவர்களுடையது என்று எப்படி கூறமுடியும். இது நாட்டு மக்களின் சொத்து. வக்ஃப் வாரியத்தின் சொத்துகள் நாட்டுக்கானது. உலகளவில் அதிகபட்ச வக்ஃப் வாரிய சொத்துகள் இந்தியாவில்தான் இருக்கிறது.
ஆனால், இந்திய முஸ்லிம்கள் ஏழைகளாக இருப்பதற்கான காரணம் அவர்களுக்காக சொத்துகளை பயன்படுத்தப்படாதது தான்.
வக்ஃப் சொத்துகளை சரியாக நிர்வகித்தால் முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்தியாவின் தலையெழுத்தையே மாற்ற முடியும்.
வக்ஃப் சொத்துகள் தொடர்பான ஒருங்கிணைந்த தளத்தை கொண்டுவரவுள்ளோம். பிற்படுத்தப்பட்ட சமூக முஸ்லிம்களுக்கும் வக்ஃப் வாரியத்தில் இடம்பெற முடியும்.
வக்ஃப் சொத்துகளை கண்காணிக்கும் முழு அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கவுள்ளோம். வக்ஃப் சொத்துகள் நாட்டுக்கு சொந்தமானது” எனத் தெரிவித்தார்.