செய்திகள் :

ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் விமானி பலி

post image

ஆமதாபாத்: ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாம்நகர் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு இருக்கைகள் கொண்ட ஜாகுவார் விமானம் இரவு நேரப் பயணத்தின் போது விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐஏஎஃப் ஊடக ஒருங்கிணைப்பு மையத்தின் எக்ஸ் வலைதள பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜாம்நகர் விமானநிலையத்தில் இருந்து வான்வழியாக வந்த ஐஏஎஃப் இரண்டு இருக்கைகள் கொண்ட ஜாகுவார் விமானம் புதன்கிழமை இரவு நேரப் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. விமானிகள் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டு விமானத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெற்றிகரமாக நகர்த்தி பாதுகாப்பாக வெளியேற தொடங்கினர். விபத்தில் சிக்கிய விமானத்தில் இரண்டு பேர் இருந்தனர். நல்வாய்ப்பாக ஒரு விமானி காயங்களுடன் தப்பினார். அவர் ஜாம்நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போன மற்றொரு விமானியை விமானப்படை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இந்த நிலையில், காணாமல் போன விமானி தீயில் சிக்கி உயிரிழந்ததாக வியாழக்கிழமை விமானப்படை அறிவித்துள்ளது.

பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்

விமானியின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள இந்திய விமானப்படை , விமானியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.

விமான படையின் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை இரவே சென்று பார்வையிட்டனர். இதற்கிடையில், விமான விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு ஐஏஎஃப் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விபத்துக்கு முன்பு ஒரு விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானம் தீப்பிடித்ததால் மற்றொரு விமானியை மீட்க முடியவில்லை. இதனால் தீயில் சிக்கி விமானி பலியானார் என்றார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மார்ச் 7 ஆம் தேதி, ஹரியாணாவின் அம்பாலா அருகே ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது, அதில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக என்று ஐஏஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையின் 25,753 பணி நியமனங்கள் செல்லாது -உச்சநீதிமன்றம் தீா்ப்பு

மேற்கு வங்க பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25,753 ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் பணிநியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இவ்விவகாரத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-ஆவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்தி... மேலும் பார்க்க

காற்று மாசு: செயற்கை மழை சோதனைக்கு தில்லி அரசு திட்டம்

தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் சோதனை முயற்சியை தில்லி அரசு மேற்கொள்ள உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை தெரிவித்... மேலும் பார்க்க

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

சுல்தான்பூா்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் புகாா்தாரா் தரப்பு சாட்சிகள் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு உத்தர பிரதேச மாநில சிறப்பு நீதிமன்... மேலும் பார்க்க

செயற்கைக்கோள் அலைக்கற்றை நிா்வாக ரீதியிலேயே ஒதுக்கீடு -மத்திய அரசு விளக்கம்

‘செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் மூலம் அல்லாமல் நிா்வாக ரீதியாகவே ஒதுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

மோதலை உருவாக்க மத்திய அரசு முயற்சி: காா்கே

‘வக்ஃப் திருத்த மசோதா மூலம் முஸ்லிம்களை ஒடுக்கி மோதலை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது’ என மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மாநிலங்களவையி... மேலும் பார்க்க