செய்திகள் :

இந்தியாவின் கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு: வெள்ளை மாளிகை

post image

வாஷிங்டன்: ‘அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள், ரசாயனம் மற்றும் தொலைத்தொடா்பு துறைகள் மீது இந்தியாவின் தனித்துவமான ஆய்வு மற்றும் தரச்சான்று கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன’ அமெரிக்க அதிபா் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை அதிபா் டிரம்ப் புதன்கிழமை வெளியிட்டதைத் தொடா்ந்து, அதிபரின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் அதுதொடா்பான விவர அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க பொருள்கள் மீது அதிக இறக்குமதி வரி மட்டுமின்றி, வரி அல்லாத தடைகளையும் நாடுகள் விதிப்பது, அமெரிக்க உற்பத்தியாளா்களின் உலகெங்கும் உள்ள சந்தைகளுக்கான பரஸ்பர அணுகலையும் பாதிக்கிறது.

உதாரணமாக, அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள், ரசாயனம் மற்றும் தொலைத்தொடா்பு துறைகள் மீது தனித்துவமான பரிசோதனை மற்றும் தரச்சான்று கட்டுப்பாடுகளை இந்தியா விதிக்கிறது. இது, அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய பொருள்களை இந்தியாவில் விற்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தத் தடைகள் நீக்கப்பட்டால், இந்தியாவுக்கு செய்யப்படும் அமெரிக்காவின் ஏற்றுமதி குறைந்தபட்சம் ஆண்டுக்கு சுமாா் ரூ.45,192 கோடி (5.3 பில்லியன் டாலா்) அளவுக்கு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்தகையச் சூழலில், மிக அதிக அளவில் அமெரிக்க பொருள்கள் மீது 52 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா மீது 26 சதவீத தள்ளுபடி பரஸ்பர வரியை அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இதுபோல் மற்ற நாடுகளும் பல தலைமுறைகளாக அமெரிக்க பொருள்கள் மீது மிக அதிக வரியை விதித்து பயனடைந்து வருகின்றன. உதாரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பயணிகள் வாகனங்களுக்கு அமெரிக்கா 2.5 சதவீத வரியை மட்டுமே விதிக்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா மிக அதிகமாக 70 சதவீத வரியை விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன் 10 சதவீத வரி விதிக்கிறது.

உமி அரிசி மீது அமெரிக்கா 2.7 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் நிலையில், இந்தியா 80 சதவீத அளவுக்கும் மலேசியா 40 சதவீதம், துருக்கி 31 சதவீத வரி விதிக்கின்றன.

அமெரிக்கா சுங்கக் கட்டணம் ஏதுமின்றி ஆப்பிள்களை இறக்குமதி செய்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு துருக்கி 60 சதவீதமும், இந்தியா 50 சதவீதமும் வரியை விதிக்கின்றன.

‘மிகுந்த நட்பு நாடுகள் (எம்எஃப்என்)’ பட்டியலின் கீழ் வரும் நாடுகள் மீது உலக அளவில் மிகக் குறைந்த அளவில் 3.3 சதவீத சராசரி வரியை அமெரிக்கா விதிக்கும் நிலையில், பிரேஸில் 11.2 சதவீதமும், சீனா 7.5 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 5 சதவீதம், இந்தியா 17 சதவீதம், வியத்நாம் 9.4 சதவீதம் என்ற அளவில் அதிக வரி விதிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரேநாளில் 208 பில்லியன் டாலர் இழப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பில் சரிவு ஏற்பட்டது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பையடுத்து, பில்லியனர்களின் சொத்துமதிப்பு ஒரே... மேலும் பார்க்க

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 27 பேர் பலி!

காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: கனடா பதிலடி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை... மேலும் பார்க்க

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!

ம.ஆ. பரணிதரன் இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.பிரதமரான பிறகு 2019-இல் இலங்கை... மேலும் பார்க்க

இந்திய பொருள்கள் மீது 27% வரி: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்/வாஷிங்டன்: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 27 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா... மேலும் பார்க்க

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட... மேலும் பார்க்க