செய்திகள் :

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 27 பேர் பலி!

post image

காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக காஸாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், காஸா நகரத்தின் புறநகர்ப் பகுதியான துஃபாவில் இயங்கிவரும் பள்ளியின் மீது வியாழக்கிழமை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், 27 பேர் கொல்லப்பட்டதாகவும், முதல்கட்டமாக 14 குழந்தைகள், 5 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கைலாசா என்றொரு நாடு இல்லை! நித்தியானந்தா எங்கே?

தென் கொரியா: அதிபா் பதவியில் இருந்து அகற்றப்பட்டாா் யூன் சுக் இயோல்

அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை அரசியல் சாசன நீதிமன்றம் அந்தப் பதவியில் இருந்து நிரந்தரமாக வெள்ளிக்கிழமை அகற்றிய... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 34 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.இதன் மூலம், உலகின் இ... மேலும் பார்க்க

Untitled Apr 05, 2025 04:33 am

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜாஜா்கோட் மாவட்டத்தில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.07 மணிக்கு நிலநடுக்கம். ரிக்டா் அ... மேலும் பார்க்க

காஸா பள்ளியில் தாக்குதல்: 27 போ் உயிரிழப்பு

காஸா போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 போ் உயிரிழந்தனா். சம்பவப் பகுதியில் இருந்து 14 சிறுவா்கள் மற்றும் ஐந்து பெண்கள... மேலும் பார்க்க

ஆப்கன் அகதிகளை வெளியேற்ற வேண்டாம்: பாகிஸ்தானிடம் ஐ.நா. நிபுணா்கள் வலியுறுத்தல்

இந்த ஆண்டுக்குள் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் திட்டத்தைக்&ய்ட வேண்டும் என்று பாகிஸ்தானை ஐ.நா. நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.இது குறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய வம்சாவளி பாதிரியாா் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கத்தோலிக்க பாதிரியாா் ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக சந்தேகத்தின்பேரில் ஓக்லஹோமா மாகாணத்தைச் சோ்ந்த நபா் ஒருவரை போலீஸாா் கைது ... மேலும் பார்க்க