ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ப...
Untitled Apr 05, 2025 04:33 am
நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜாஜா்கோட் மாவட்டத்தில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.07 மணிக்கு நிலநடுக்கம். ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.2 அலகுகளாகப் பதிவானது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 5.5 ரிக்டா் அளவு கொண்ட மேலும் ஒரு நிலநடுக்கம் இரவு 8.10 மணிக்கு ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறினா். எனினும், நிலநடுக்கங்கள் காரணமாக உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.