செய்திகள் :

ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்

post image

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய வம்சாவளியுமான சத்யா நாதெல்லாவும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு செயல் நுண்ணறிவு தொழில்நுட்பச் சேவையை வழங்கியதை எதிர்த்து, நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் செயல் நுண்ணறிவு துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலைமான் உரையாற்றியபோது, அவரது உரையைத் தடுத்த சில ஊழியர்கள் கூறியதாவது, செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் அக்கறை இருப்பதாக கூறுகிறீர்கள்; ஆனால், செயல் நுண்ணறிவு ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்துக்கு மைக்ரோசாஃப்ட் விற்கிறது.

ஐம்பதாயிரம் பேர் இறந்துள்ளனர்; எங்கள் பிராந்தியத்தில் இந்த இனப்படுகொலைக்கு மைக்ரோசாஃப்ட் அதிகாரம் அளிக்கிறது. இது உங்களுக்கு அவமானம். நீங்கள் உள்பட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அனைவரின் கைகளிலும் ரத்தக் கறை படிந்துள்ளது என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதிலளித்த முஸ்தபா, உங்கள் எதிர்ப்பு குறித்து பதில் அறிய முயல்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து, நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, உங்கள் அனைவரின் குரல்களும் கேட்கும்வகையில், நாங்கள் சந்தர்ப்பம் வழங்குகிறோம்.

ஆனால், பணியிலோ வணிகத்துக்கோ இடையூறு விளைவிக்காத வகையில், இதைச் செய்ய வேண்டும். இடையூறு ஏதேனும் ஏற்பட்டால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று குறிப்பிட்டிருந்தனர். இஸ்ரேலுடனான ஒப்பந்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 ஊழியர்களை, நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் சிலர் பணியைவிட்டும் விலகிச் சென்றனர்.

காசா மற்றும் லெபனான் இடையேயான போரில், குண்டுவெடிப்பு இலக்குகளைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐயின் செயல் நுண்ணறிவு மாதிரிகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிக்க:நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்

பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது! திருக்குறள் மூலம் நன்றி சொன்ன மோடி!!

கொழும்பு: இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்துள்ளார்.பாங்காக் சென்றிருந்த பிரதமர் மோடி அ... மேலும் பார்க்க

இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி

கொழும்பு: இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று கொழும்பில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.மீனவர்களின் விவகாரத்தை மனிதாபிமா... மேலும் பார்க்க

கொழும்புவில் பிரதமர் மோடி: இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கை சென்றிருக்கும் பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கொழும்புவில், இன்று நடைபெற்ற இருநாட்டுத் தலைவர்கள் இடையேயான ப... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் நிதியுதவி

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா உள்பட குவாட் நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன.மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியில் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. த... மேலும் பார்க்க

மெக்சிகோ: பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி

மெக்சிகோவில் மனிதருக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது. மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்த... மேலும் பார்க்க

தென் கொரியா: அதிபா் பதவியில் இருந்து அகற்றப்பட்டாா் யூன் சுக் இயோல்

அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை அரசியல் சாசன நீதிமன்றம் அந்தப் பதவியில் இருந்து நிரந்தரமாக வெள்ளிக்கிழமை அகற்றிய... மேலும் பார்க்க