செய்திகள் :

'டெல்லி க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வரேன்' - கோவையில் சிக்கிய போலி அதிகாரி; அலட்சியம் காட்டியதா போலீஸ்?

post image

டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற சைபர் க்ரைம் மோசடி நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த மோசடியில் போலி அதிகாரிகள் வீடியோ கால் மூலம் வந்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர். இந்நிலையில் போலி அதிகாரிகள் ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக வரத்தொடங்கிவிட்டனர் என்ற புகார் எழுந்துள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட்

அந்த வகையில் டெல்லி க்ரைம் பிராஞ்ச் அதிகாரி என்று கோவையில் ஒருவரிடம் நேரடியாக பேசி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`க்ரைம் பிராஞ்சில் இருந்து வந்திருக்காங்க’

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த ஜே.டி.சாக்ரடீஸ் என்பவர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று  மதியம் சுமார் 1.45 மணிக்கு என் உறவினர் அழைத்தார். எதிர்முனையில் பேசிய உறவினர் பதற்றத்தோடு, ‘ மாமா...... டெல்லியிலேருந்து க்ரைம் பிராஞ்சில் இருந்து வந்திருக்காங்க’ என்றார். அதிகாரி என்று கூறிய நபரிடம் நான் பேசியபோது, நேரில் வரச்சொன்னார்.

காவல்துறை விசாரணை

அந்த டெல்லி அதிகாரி என் உறவினரிடம், ‘உங்க பெயரில் அணு குண்டுகள் தயாரிக்கும் வேதிப்பொருள் ஒன்றை வாங்கி இலங்கைக்கு இரண்டு முறை அனுப்பி இருக்கீங்க. அடுத்ததாக வருகிற 10-ம் தேதி உங்களுக்கு வர இருக்கிறது.’ என்று சொல்லியுள்ளார்.

மேலும்  அவரின் அப்பா, உறவினர்கள் உள்ளிட்ட அனைவரின் பெயரையும் அந்த அதிகாரி சரியாக சொல்லியுள்ளார். நாங்கள் ஆர்.எஸ் புரம் காவல்நிலையம் சென்றோம். பிறகு எஸ்எஸ்ஐ கருப்பசாமி என்பவருடன் அந்த அதிகாரி சொன்ன இடத்துக்கு நேரில் சென்றோம். ‘உள்ளூர் காவல் நிலையத்தில் சொல்லாமல் இங்கே எப்படி விசாரணைக்கு வந்தீர்கள்.’ என்று அவரிடம் கேட்டோம்.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

அதற்கு அந்த அதிகாரி, ‘டிஜிபி அலுவலகத்தில் தகவல் கொடுத்திருக்கிறோம்.’ என்று அதற்கான கடிதத்தை காட்டினார்.  மேலும், ‘இவர்கள் தவறு செய்யவில்லை. இவர்கள் பெயரில் தவறு நடந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லத்தான் வந்தேன்.’ என்றார்.

அவரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்தபோது அதில், ‘NATIONAL CRIME INTELLIGENCE AGENCY என்ற NON GOVERNMENTAL ORGANISATION தலைப்பில் இவரது பெயர் AUGUSTIAN BIJU என்றிருந்தது. அவர் போலி அதிகாரி என்பதை உறுதி செய்தோம். உடனடியாக அவரை ஆர்எஸ்புரம் காவல் நிலையம் அழைத்து சென்றோம்.

அந்த நபரின் அடையாள அட்டை

அங்கு அவரிடம் விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் முத்து, ‘உண்மையான க்ரைம் பிராஞ்ச்  அதிகாரியாக இருந்தால் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார். அதை விட்டு ஏன் உஷார் படுத்த வரவேண்டும். NATIONAL CRIME INTELLIGENCE AGENCY என்பது காவல்துறை தொடர்புடையதோ அரசாங்கத் தொடர்புடையதோ அல்ல.’ என்று கூறினார்.

பிறகு அந்த நபரை எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பிவிட்டனர். அந்த நபர் போலியானவர் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் விடுவித்தது சரியா. டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற பெயரில் பெரிய பெரிய மோசடிகள் நடக்கின்றன. இன்னும் தீவிரமாக விசாரித்திருந்தால் அவருடன் இருப்பவர்கள் உள்ளிட்ட பின்னணி தகவல்கள் தெரிந்திருக்கும்.

டிஜிட்டல் மோசடி...

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா. இவர்களை எளிதாக விட்டால் குற்றம் செய்வோருக்கு மிரட்டி பணம் பறிக்கக் கூடுதல் தைரியம் வராதா.” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது இந்த விவகாரம் உயரதிகாரிகள் வரை செல்ல, இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்க சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆர் எஸ் புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துவிடம் விளக்கம் கேட்டபோது, “அந்த நபர் ஒரு என்ஜிஓ.

தமிழக காவல்துறை

இதற்காக உள்ள பதிவு செய்யப்பட்ட ஓரு தன்னார்வு அமைப்பு நிறுவனத்தில் அவர் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் விசாரணை நிறைவடைந்தவுடன் உங்களிடம் முழு தகவல்களையும் பகிர்கிறேன்.” என்றார்.

``நவராத்திரியில் மாதவிடாய்; விரதம் இருக்க முடியவில்லை..'' - மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பெண்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் பிரியன்ஷா சோனி (36). ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த 30-ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட முடிவு... மேலும் பார்க்க

வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த மராத்தி நடிகர்!

நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அந்த பட்டியலில் மராத்தி நடிகர் சாகர் கராண்டே என்பவரும... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும்..! கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் திடீரென விழுந்த கான்கிரீட் - ஆடி கார் சேதம்!

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்படும் பாலங... மேலும் பார்க்க

மதுரை: 22 ஆண்டுகளாகத் தொடரும் பழிக்குப்பழி கொலைகள்; அதிர வைக்கும் அடுத்த சாப்டர்; பின்னணி என்ன?

'அடக்க முடியாத கோபத்தைக் கட்டி வை, காலம் உன்னிடம் வரும்போது ஒருவனையும் விடாதே... கருவறு..." - சமீபத்தில் மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் நண்பர்கள் முகநூலில் வெளியிட்ட அஞ்சலிக் கு... மேலும் பார்க்க

திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்... மேலும் பார்க்க

”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் பின்னணி என்ன?

தர்மபுரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் நெப்போலியன்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன்(68... மேலும் பார்க்க