செய்திகள் :

``நவராத்திரியில் மாதவிடாய்; விரதம் இருக்க முடியவில்லை..'' - மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பெண்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் பிரியன்ஷா சோனி (36). ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த 30-ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது.

வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட முடிவு செய்த பிரியன்ஷா சோனி அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதற்காக தனது கணவரிடம் சொல்லி பூஜைக்கு வேண்டிய பொருள்கள், பழம், பூ, விளக்கு போன்றவற்றை வாங்கி வரும்படி கூறினார். அவரது கணவரும் சோனி சொன்னபடி தேவையான பொருள்களை வாங்கிக்க்கொண்டு வந்தார்.

மன உளைச்சல்

கடந்த 30ம் தேதி பூஜை தொடங்க இருந்த நிலையில், அன்று பிரியன்ஷா சோனி-க்கு மாதவிடாய் வந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் பூஜை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அதோடு விரதமும் இருக்கவேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் மன விரக்தி அடைந்த சோனி மிகவும் மன வருத்ததில் இருந்தார்.

நவராத்திரியில் கடவுளை வழிபடமுடியாமல், நோன்பு இருக்கமுடியாமல் போய்விட்டதே என்று கவலையில் இருந்தார். சோனியின் கணவர் அவரை சமாதாப்படுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

அவர் வேலைக்கு சென்ற பிறகு சோனி அழுது கொண்டே வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

தற்கொலை

இதனால் முகேஷ் அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தார். சிகிச்சையில் இருந்தபோது தனது கணவரிடம் இருவருக்கும் ஜூஸ் வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டார். அவர் ஜூஸ் வாங்கி வந்த சிறிது நேரத்திற்கு சோனி இறந்து போனார்.

இது குறித்து முகேஷ் கூறுகையில், நவராத்திரிக்காக சோனி ஒரு ஆண்டாக காத்திருந்தார். ஆனால் அந்த நாள் வந்தபோது மாதவிடாய் உண்டானதால் எப்படி கடவுளை வழிபடுவது, பூஜைகள் செய்வது என்ற கவலையில் ஆழ்ந்தார். சோனி செய்ய வேண்டிய பூஜைகளை அவருக்காக நான் செய்வதாக சொன்னேன். ஆனால் அவர் தொடர்ந்து மனவருத்தத்தில் இருந்தார்'' என்று தெரிவித்தார்.

தற்கொலை தடுப்பு மையம்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த மராத்தி நடிகர்!

நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அந்த பட்டியலில் மராத்தி நடிகர் சாகர் கராண்டே என்பவரும... மேலும் பார்க்க

'டெல்லி க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வரேன்' - கோவையில் சிக்கிய போலி அதிகாரி; அலட்சியம் காட்டியதா போலீஸ்?

டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற சைபர் க்ரைம் மோசடி நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த மோசடியில் போலி அதிகாரிகள் வீடியோ கால் மூலம் வந்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர். இந்நிலையில் போலி அதிகாரி... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும்..! கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் திடீரென விழுந்த கான்கிரீட் - ஆடி கார் சேதம்!

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்படும் பாலங... மேலும் பார்க்க

மதுரை: 22 ஆண்டுகளாகத் தொடரும் பழிக்குப்பழி கொலைகள்; அதிர வைக்கும் அடுத்த சாப்டர்; பின்னணி என்ன?

'அடக்க முடியாத கோபத்தைக் கட்டி வை, காலம் உன்னிடம் வரும்போது ஒருவனையும் விடாதே... கருவறு..." - சமீபத்தில் மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் நண்பர்கள் முகநூலில் வெளியிட்ட அஞ்சலிக் கு... மேலும் பார்க்க

திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்... மேலும் பார்க்க

”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் பின்னணி என்ன?

தர்மபுரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் நெப்போலியன்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன்(68... மேலும் பார்க்க