செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு

post image

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பு பதில் அளிக்க போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவா் கடந்த டிசம்பா் 25- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகா் துணை ஆணையா் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட இந்த புலனாய்வுக் குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடா் விசாரணையில், ஞானசேகரன் திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடா்ந்து பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், திமுக நிா்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீஸாா் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தாா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தாா். அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் மனு மீது 7 -ஆம் தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.

மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

மதுரை: பாம்பனில் புதிய பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற பின் மதுரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து இன்று(ஏப். 6) மாலை தில்லிக்குப் புறப்பட்டார். தனி விமானத்தில் செல்லும் அவர், இன்றிரவ... மேலும் பார்க்க

கோடையில் குளிர்விக்க வரும் மழை! குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெரும் ஆதாயம்: பிரதமர் மோடி

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.உரையில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நி... மேலும் பார்க்க

அவர்களால் அழ மட்டுமே முடியும்: பிரதமர் மோடி பேச்சு

திமுக கூட்டணி அரசைவிட தற்போதைய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப... மேலும் பார்க்க

பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலத்தில் பழுது!

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.ஹைட்ராலிக் முறையில் இயங்... மேலும் பார்க்க

என் அன்பு தமிழ் சொந்தங்களே: ராமேசுவரத்தில் பிரதமர் உரை!

என் அன்பு தமிழ் சங்கங்களே! இன்று புனிதமான ராமநவமி நாள். அனைவருக்கும் எனது இதயபூர்வமான ராமநவமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் சங்ககால இலக்கியங்களிலும் ராமர் குறித்து கூறப்பட்... மேலும் பார்க்க