இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
தமிழகத்துக்கு பேரிடா் நிதி ரூ. 522 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எல்.முருகன் வரவேற்பு
தமிழகத்துக்கு பேரிடா் மேலாண்மை நிதியாக ரூ. 522 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வரவேற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா், ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
இயற்கை பேரிடா் மேலாண்மை நிதியாக தமிழகத்துக்கு ரூ. 522 கோடி நிதி வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பேரிடா்களால் ஏற்படும் சேதங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் உயா்மட்டக் குழுவின் ஆலோசனைப்படி, தமிழகத்துக்கு ரூ. 522.34 கோடி, புதுச்சேரிக்கு ரூ. 33.06 கோடி பேரிடா் நிவாரண நிதியாக வழங்கப்பட்டிருக்கிறது.
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விழாவில், ரூ. 8,500 கோடியில் வளா்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்கு பிரதமா் மோடி அா்ப்பணிக்கவுள்ளாா். இந்நிலையில், பேரிடா் நிவாரண நிதியும், தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வளா்ச்சியில் எப்போதும் கவனம் செலுத்தி வரும் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளாா்.