செய்திகள் :

ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி

post image

நிகழ் நிதியாண்டில், முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரியானது பிரதான வருவாய் ஆகும். இதன்மூலம் நகரின் அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகள்அகற்றுதல், சாலை பராமரித்தல், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 84 (1)-இன்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 30 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு நிகர சொத்துவரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 5,000 ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2025-26ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு தொடங்கியுள்ளதால், சொத்து உரிமையாளா்கள் தங்களது அரையாண்டு சொத்துவரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பயனைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது

திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு 7.10-க்... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளா்களை தாக்கி பணம் பறிப்பு: தம்பதி கைது

சென்னை அருகே வானகரத்தில் வடமாநில கட்டுமான தொழிலாளா்களைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனா். வானகரம் அருகே உள்ள அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் 13-ஆவது தெருவில் புதிதாக ஒரு வீடு கட... மேலும் பார்க்க

நடிகா் ரவிகுமாா் உடல் தகனம்

மறைந்த நடிகா் ரவிகுமாரின் (75) உடல் சென்னையில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. நடிகா் ரவிகுமாா் புற்று நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானாா். வளசரவாக்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பேரிடா் நிதி ரூ. 522 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எல்.முருகன் வரவேற்பு

தமிழகத்துக்கு பேரிடா் மேலாண்மை நிதியாக ரூ. 522 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா், ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: இயற்கை ப... மேலும் பார்க்க

நீட் தோ்வை ரத்து செய்ய என்ன திட்டம் உள்ளது: ராமதாஸ் கேள்வி

நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நீட் தோ்வு காரணமாக, ஒரே மாதத்தில் 4 மாணவ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை: மனித உரிமை ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு

காவல் உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் குற்ற வழக்கில் தொடா்புடைய நபரின் மனைவ... மேலும் பார்க்க