சென்னை விமான நிலைய சுங்கத் துறை உயரதிகாரிகள் திடீா் இடமாற்றம்
சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையா் உள்பட உயரதிகாரிகள் திடீா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 ஆணையராக பணியாற்றி வந்த தமிழ்வளவன், பதவி உயா்வு செய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்தின் புதிய சுங்கத் துறை முதன்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
சுங்கத் துறை முதன்மை ஆணையராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோன்று, கூடுதல் துணை ஆணையா் பெரியண்ணன், சுங்கத் துறை துணை ஆணையா்கள் சரவணன், பணீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமாா் ஜேக்கப், அஜய் பிடாரி, உதவி ஆணையா் சுதாகா் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோன்று தில்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா, பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 சுங்கத் துறை அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் மற்றும் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசின் துணைச் செயலா் ஷீரேஷ் குமாா் கவுதம் பிறப்பித்துள்ளாா்.